தேடலாம்

பக்கங்கள்

Thursday, May 24, 2018

வெட்டுவது எப்படி? சொல்லித் தருகிறார், ஆச்சா மரம் வளர்த்த சந்திரன் மகராசன்!

இந்த சில்லி மசாலா துகள்கள் பக்கா இன்னோவேஷன் பட்டியலில் வந்துள்ளது. ஃப்லிப்(FLIP) எனும் திருப்பிப் போடு செய்து பார்க்கின் இந்த பொட்டலத்தில் கீரநத்தம் என்ற சொல் இருப்பதற்கு எத்தனை வாய்ப்பு உளது. சென்னை என்ற சொல் காணப்பட எத்தனை? என்னைப் போல நீங்களும் கொட்டைப் பாக்கு கொழுந்து வெத்தலை அகப்பட ஏது செய்வீர்களாக!
சந்திரன் மாஸ்டர் தன் நொய்டா தையலகம் பள்ளிக்கு சூட்டு-பூட்டுடன் தான் வருவார். எப்பவுமே! ஆனால் பத்திரிக்கைகளில் சூட்டு-பூட்டு பிரபலம் ஆன பிற்பாடு தான் இந்த ஏற்பாடு. உண்மையில் சூட்டு-பூட்டு பிடித்தது சவுந்தரி மேடத்துக்கு தான்! இப்போ அதுக்கு தான் போட்டி ஆயிருச்சே. சூட்டு-பூட்டு போட்டு தையல் பள்ளிக்கு வர ஆரம்பித்தவுடன் தையல் பள்ளிக்கு புது புது ஆட்களும் வந்து படிக்கிறார்கள் மாணாக்கச் செல்வங்களும் மலிவாகக் கிடைக்கிறார்கள். தன் சூட்டை "TAILORS OF NOIDA" என்கிற பதத்தை நின்றவாக்கில் மேலிருந்து கீழே மழைநீர் சொரியும் போல் டிசைனில் தையல்நூல் பிணைந்து இருப்பது போல அம்சத்தை புகுத்தி செய்யப்பட்ட கருநீல துணி கொண்டு தைத்திருந்தார் சந்திரன் மாஸ்டர். இந்த சூட்டு தைப்பதற்கு அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள *ஹலீமா அப்பாஸ் கிராண்ட் டெய்லர்கள்* நிறுவனத்தில் அலகிட்டு முறையே ஆர்டர் கொடுத்து *நயந்து பேசி* ( நயன்தாரா? பெயர் விளக்கம்!? ) எந்தவித பொல்லாப்புக்கும் இடம் கொடுக்காமல் ( GST-க்கு மாலை அணிவிக்காத குறை! ) முழுமனத் திருப்தியுடன் காத்திருந்து பெற்றுக் கொண்டார். இப்படிப்பட்ட சந்திரன் மாஸ்டரிடம் எனக்கு பிடித்த விசயம், அவர் யாரையும் பேஜார் பண்ண மாட்டார். இந்த ஒரே குணத்திற்காக செவாலியே விருதுக்கு அவரை நான் புரிந்துரை செய்கிறேன். எனக்குத் தெரிந்த வரை இதுவரை அவர் யாரிடமும் டக்கால்டி எதுவும் பண்ணவில்லை. அப்புறம் சூட்டு-பூட்டிலுள்ள பூட்டு பாகத்தையும் *ஹலீமா அப்பாஸ் கிராண்ட் டெய்லர்ஸ்* நிறுவனத்திடமே தேர்வு செய்தார். என் எள்ளு மிட்டாய் எங்கே? என்று வாய் பிளப்பவர்களுக்கு: இப்ப ஓய்வு பெற்ற ஏபி டிவில்லியர்ஸ் அய்யாவுடன், சூட்-பூட்டுக்கு அளவெடுக்க சென்ற காலையில் ராயப்பேட்டை *ஹலீமா அப்பாஸ்* லவுஞ்சில் சற்று நேரம் ஷாட் செலக்சன் பற்றி பேசினார் நம்ம சந்திரன் மாஸ்டர்! இப்ப தையல் வகுப்புக்கு சரியான நேரத்துக்கு வந்துவிட்டார். கதவின் நீள கண்ணாடி தடுப்பின் ஊடே கூர்ந்து பார்க்கிறார். அப்பாடா! எல்லோரும் வந்து விட்டார்கள். சட்டென உடம்பெல்லாம் தசை டென்சன் ஆழ்ந்த மூச்சு மூன்று முறை. ரெடி! இப்ப முகுந்தராஜா சொன்னது அவருக்கு நினைவுக்கு வருகிறது: சொல்லிக்கொடுப்பதற்கு உங்களைப் பழக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அழகாகி விடுவீர்கள்!

இன்று கைத்தையல் பாடம் என்று சொல்லியிருக்கிறேன். வெயிட் வெயிட்! ஏன் தள்ளிப் போடவேணும்? இப்ப இந்த பாடம் ஈசியாக இருக்கும் என்பது தான் நான் சொல்கிறேனே! என்ன? சரி! அதுக்கு எல்லோரிடமும் கத்தரிக்கோல் வேண்டும். இருக்கிறதா? இருக்கிறதா! ஓகே ஓகே! சரி எப்ப இருந்தாலும் கைத்தையல் முறைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றபடி உங்கள் விருப்பம். நம்பத்தகுந்த விசயங்களைப் ஒருதரம் பார்த்து விட்டு பாடத்துக்கு செல்வோமா? நம்பத்தகுந்த விசயங்கள் என்பது நம் அன்றாட வகுப்பில் நாம் ஆற்றிவரும் அரிய படிப்பு முறை. இதில் நாம் நம்ப முடியாத விசயம் ஒன்றினை எடுத்து நம்பத்தகுந்த விசயமாக மாற்ற என்ன பண்ண வேண்டும் என்று ஏழு நிமிடங்கள் - ஏழே நிமிடங்கள் தத்தம் செய்து வாசிக்க வேண்டும்.

{ எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு } - குறள் 470

தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.  }

இந்த குறள் தான் TAILORS OF NOIDA-வுக்கு அணிந்துரை. புதிதாக உருவாக்குதல் அழகு. சிறுபிள்ளைகள் போல. நாம் குழந்தை பிறந்து தவழ்ந்து அ அம்மா என்று சொன்னவுடன் மகிழ்ந்து விடுகிறோம். அதுக்கப்புறம் Z வரையில் சொல்லும் போது நாம் என்ன செய்கிறோம்? நம்ம தையல் தொழிலை பொருத்த மட்டில் வாடிக்கையாளர் வந்த முதல் அறிமுகம் முதல் வாடிக்கை - A என்று குறிப்பெழுதி Z வரையில் அவருடன் செல்ல வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் நாம் அதிகமான முறையில் பில் செய்ய வேண்டும். நம் திறமும் சேவையும் மனப்பான்மைத் தன்மையும் கொண்டு செயலாற்றினால் நாம் அதிகமாக கேட்கும் பில் தொகையை வாடிக்கையாளர்கள் தருவது மட்டுமல்லாமல் தம் அயலார் நலம் பேணும் போது நம்மைப் பற்றி உயர்வாகவும் கூறுவர். நம்பத்தகுந்த விசயங்கள் நம் தையல் தொழிலுக்கு மிகவும் உறுதுணையான பாடமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் நம்மிடம் கேட்கும் மிகவும் கடினமான தேவைகளை அவர்களுக்கு பிடித்தமான வடிவில் செய்து தர நம்பத்தகுந்த விசயங்கள் பயிற்சி முறை கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றாகும். இன்றைய நம்பத்தகுந்த விசயங்கள் பயிற்சிக்கு பின் நம் பாடத்திற்கு செல்லலாம். இன்றைய நம்பத்தகுந்த விசயம்: கடிகாரம் இன்றி அன்றாட வாழ்க்கை!
ஆச்சா மரம் தேடும் போது சற்று நின்று கொஞ்சம் அருகம்புல் சாப்பிடலாமே என்று நினைத்தால் அந்தோ என் பாச்சா என்ன ஆகிற்று என்று பாருங்கள்! பலித்ததா பலிக்கவில்லையா? கடிகாரம் பார்க்கும் பறவைகளோ நிமிசத்துக்கு ஒரு தரம் மணிக்கு ஒரு தரம் ட்யூன் மாத்தி மாத்தி பாடினதுகள்!

சந்திரன் மாஸ்டர் அவர் தையல் வகுப்பினை ஸ்பீட்போட் சவாரி போவது போன்ற ஸ்டைலில் பாடம் நடத்துவார். பாடம் எடுத்தவுடனே நல்ல ஸ்பீட், நல்ல துடிப்பு. மாணவர்க்கும் ஓட்டிப் பார்க்க கொடுத்து வியர்க்க விடுவார். செயல்கலை பாடம் வரும்போது மாம்பழக்கூடைக் காரி கூடையை இறக்கி வைத்து காலை நீட்டி உட்கார்ந்து நீயே பொறுக்கிக்க கண்ணு என்பது போல இருக்கையில் உட்கார்ந்து விடுவார். யாருக்காவது சிரமம் இருந்தால் இன்னொரும் மாணவர் உதவி செய்து தெரிந்து இருவரும் தெரிந்து கொள்வர். முடித்துக் காட்டினால் அதைக் கண்டு கருத்து கூறுவார். சரி தவறு இரண்டுமே திருத்தி விடுவார். அன்றைய வகுப்பு நன்றாகவே அமைந்தது. மாணவர்கள் கூடிப் பேசி கைத்தையல் வகுப்பு நாளையே சொல்லிக் கொடுக்க வேண்டினர். எந்த சலனமுமின்றி ஒப்புதல் அளித்தார் சந்திரன் மாஸ்டர். மாணவர்கள் சென்றுவிட்டனர். சந்திரன் மாஸ்டர் தனியாக வகுப்பறையை ஒரு முறை சுற்றி வந்து நோட்டமிட்டார். சுவற்றினை மெதுவாக தொட்டு வருடிக் கொண்டு ஒவ்வொரு விசயங்களையும் உன்னிப்பாக பார்த்தார். சின்ன மாறுதல் செய்யவேண்டியது ஒன்றை மனத்தில் கவனித்து இருத்திக் கொண்டார். கதவருகே வந்து திரும்பி ஒரு முறை வகுப்பறையைப் பார்த்தார். மீண்டும் வாசல் பக்கம் திரும்பி வலக்காலை எடுத்து வெளியில் வைக்க வேகமாக ஊன்ற தரையே அவருக்குத் தட்டுப் படவில்லை. *சிந்தூரீய்ய்ய்* என்று ஓங்கிக் கத்தியவாறு பெருத்த ஓசையுடன் டமால்-என்று கீழே சரிந்து விட்டார்! அச்சச்சோ!! யாரும் வாருங்களேன் என்று கலக்கத்தில் அவருடைய இதயம் அரற்றிக் கொண்டிருக்க...சந்திரன் மாஸ்டரின் மூளையில் பளிச் பளிச் என்று போலிசு வண்டி மினுங்கும் விளக்கு போல பரபரப்பானது. என்ன ஆம்புலன்ஸ் சத்தம்! வழி விடு வழி விடு என்று சொல்லிக் கொண்டே தம் பின்னாடி ஆம்புலன்ஸ் வருவதாக எண்ணி சந்திரன் மாஸ்டர் பொறுப்புணர்ச்சி மிக்கவராக அந்த நிலையிலும் வழி விட வேண்டும் என்கிற எண்ணத்தால் உந்தப் பட்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்று இதயத்தைப் பிடித்துக் கொண்டார்!



Wednesday, May 23, 2018

குடும்ப நண்பரின் கலக்கம்! தெளிவு பெற்றார் தையல்காரர்!!

இந்த மாதிரி பூச்சாண்டி சிரிப்பாக உள்ளது! தையல் கடையில் தான் எடுத்தது, ஆனால் என் நண்பர் டெய்லர் சந்திரன் இன்று சுரத்தில்லாமல் இருக்கிறார்.
என்ன ஆச்சு! நான் கேட்டதும். என்ன ஆகணும் சய்யிது, பேப்பர்-ல காலைல எடுத்தா இந்த செய்தி - பாருங்க என்றார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பலி, இறந்த இளைஞரின் தாய் தகப்பன் விசம் அருந்தி தற்கோலை முயற்சி!! ஓ கடவுளே - என் மனம் நின்றுவிடும் போல இருந்தது. பத்தொன்பது வயது பயல்கள். செல்லமும் கொடுத்து பெரிய நம்பிக்கையும் வைத்து உரிய கனவுகள் கண்டு வளர்த்தவர்கள் இப்படி ஒரு அபாய காரியம் செய்யாமல் இருந்திருந்தாலும் நொறுங்கிப் போய் மனதிடம் அற்றுப் போயிருப்பார்களே! சந்திரன் டெய்லர் என்னமோ சொல்லிக் கொண்டிருந்தார்.

சின்ன டெம்போ பின்னால போயிருக்கானுவ. பிரேக் அடிக்கவும் உள்ள ஏத்திட்டு வந்த பைக்கு இவங்க மேல அப்படியே சரிஞ்சி.. சே! சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு  போயும் ரெம்ப ரத்தம் சிந்தி போகையிலயே அவுட்! ஓரே பையன்! அடுத்த வாரம் கல்கத்தாவுல மில்க் பிஸ்கெட் கம்பெனிக்கு வேலைக்கு போறதுக்கு இருந்தானாம். இந்த வாட்ஸாப்-ல பாருங்க, அப்பனுக்கு ஏகப்பட்ட கடன் போல, பெறவு எதுக்கு ஒரேயடியா ரெண்டு பேரும் பூச்சிமருந்து குடிச்சிருச்சுக. டெய்லி கடவுள கும்பிடுங்க, நான் இப்பலாம் காலைல கோவில் - தா இந்தா இருக்கே - போயிட்டு தான் கடையே தொறக்கறேன். சய்யிது! நீங்களும் உங்க மசூதி தர்காவுக்கு போங்க அம்புட்டும் நல்லது தான், நம்ம என்ன இன்னைக்கு இருக்கோம் நாளைக்கு போறோம் சேத்தற புண்ணியம் தான் நமக்கு மிஞ்சும் பாத்துக்குங்க!

இறுக்கமான மனநிலையை இவர் இப்படி நீளமாக நிறுத்தாமல் பேசினால் அப்புறம் கொஞ்சம் நிதானம் அடைவார். நான் முழுவதும் கேட்டு மௌனமாக அமர்ந்திருந்தேன். உள்ளே கத்தரிக்கோல் சத்தம் க்ளிக் க்ளிக் என்று கேட்டுக் கொண்டிருந்தது. சின்ன தனி நூலினை பெரிய கத்தரிக்கோலைக் கைப்பிடிக்கும் மேலே இரு பிளேடுகளை பிடித்து நுணுக்கமாக வெட்டிக் கொண்டிருந்தார் DJS என்று அழைக்கப் படும் DJS குமார். இவர் சேர்ந்து இரண்டு வருடங்களாகி விட்டது. இவர் வந்த பிறகு சந்திரன் டெய்லர் தொழிலை ஓரளவுக்கு ஏறுமுகம் செய்து விட்டார். இன்னும் மூன்று தையல் காரர்களுக்கு கொஞ்சமும் தளர்வில்லாமல் வேலைகள் அமைந்திருந்தது. சந்திரனின் மனைவி சவுந்தரி அக்கா உள்ளே இருந்து எட்டி பார்த்து சய்யிது வந்திருக்கா என்று சிரித்து உள்ளே மறைந்து விட்டார். புதுவளையல்கள் மினுங்கிட இப்போது முகப்பொலிவும் பிரகாசமாக இருந்தது. இப்ப எப்படியோ நல்ல ஃபேசியல் பண்ணக் கூடிய பெண்மணியைப் பிடித்து விட்டார் சவுந்தரி அக்கா!~

என்னா சய்யிது என்னமோ யோசிக்கிறிங்க சிரிக்.. என்று அப்படியே நிறுத்தி சந்திரன் DJS-ஐப் பார்க்கிறார். DJS பின்னாலிருந்து சைகையில் மெதுவாக ஏதோ சொல்ல சந்திரன் தன் இமைகளைக் குறுக்கி யோசனையில் ஆழ்ந்தார். DJS தானே எழுந்து வந்து சந்திரனின் காதருகே குனிந்து சில விசயங்கள் சொல்லவும், சந்திரன் முகம் சாந்தமானது. மொபைல் எடுத்துப் பேசுவதற்குள்ளாக குட்டி வேன் வண்டி வந்து அழகாக நின்றது. தோ வண்டி வந்திருச்சி என்று சந்திரன் கூற DJS அந்த முக்கியமான வேலையைச் செய்யலானார். சந்திரன் கல்லாவில் எண்ணி வைத்திருந்த பணத்தினை மீண்டும் ஒரு முறை எண்ணி சரிபார்த்து உள்ளே வைத்தார். DJSப்பா பணம்! இந்தா ஸ்ஸ் இங்க கல்லாவுல இருக்கு. கிளம்பறதுக்குள்ள இவன்ட்ட கொடுத்து அனுப்பு என்று எழுந்து உள்ளே சென்று மற்ற தையல்காரர்களிடம் பேசிக் கொண்டு வருவதற்குள் தெருவில் வண்டிகள் நிறுத்தப் பட்டு தெருவே நின்று போனது. ஒரு மணிநேரம் அப்புறம் தான் சீராகுமென நொந்தவாறு DJS உள்ளே சென்றார்.

சந்திரன் சிரித்தவாறு பரவாயில்லப்பா இது நல்ல விசயம் தான். என்னா சய்யிது உங்களுக்கு தெரியுமா? நம்ம லைன் கடைகளுக்கு தரைக்கு அடியிலருந்து மின்சாரம் சப்ளை நாளைலருந்து. தெருவுக்கு மேலே அங்கிட்டும் இங்கிட்டுமா தொங்கிக் கிடக்கிற ஒயர்களை பிடுங்கி தெருவே சுத்தமா இருக்கும். கரன்ட் போவாதாம்ல என்று சந்திரன் சிலாகித்தார். நான் சூப்பர்தான்! கலக்கிட்டிங்க என்றேன். ஒவ்வொரு கடைக்கும் பதினெட்டு வாங்கினான். அதிகமா குறைவா என்பதற்கு எனக்கு விடை தெரிந்தாலும் சந்திரன் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். கடையின்னு வச்சிப்புட்டா செலவு தான் அது சரி நீங்க ஐடி கம்பெனில என்னா வேலை பாத்தீங்க! மவன் கேட்டான், நானும் கேட்டுச் சொல்றேன்னுட்டேன். /விக்னேஷ் எப்படி இருக்கான், வாரம் பத்து நாளா ஆளே காண்கலயே! நீங்க சொல்ல வேண்டியது தானே!/ சரி இப்ப சொல்லுங்க என்றார் சந்திரன்.

புரொசஸ் ஆடிட்டர் வேலை சந்திரன் மாஸ்டர்! என நான் சொன்னேன். புரியலயே கணக்கு பாத்து வரி கட்டற ஆடிட்டரா இருக்க மாட்டிங்க! நீங்க என்ன ஆடிட்டர் வேலை பாத்தீரு! நான் உற்சாகமானேன். அது சரி டெய்லர் கிங்கு நீங்க கடைசில எப்ப நொய்டா போனீங்க? மெதுவாக திரும்பி தன் டிப்ளோமா சான்றிதழைப் பார்த்து கிறுகிறுப்பு அடைந்தது தெரிந்தது. சரி போயிட்டா போச்சு, நீங்க தொட தொட தொடருங்க அடச்சீ தொடங்குங்க சய்யிது. நாமளும் ஏதாவது ஒசந்த விசயத்த தெரிஞ்சிக்கிடுவோம்! இப்போது எல்லாம் காது மயம் ஆகிப்போனது. நான் சொன்னேன் : புரோஜெக்ட்கள் தாம் திட்டம் போட்டு பரிசீலித்து புரோஜெக்ட் தொடங்குகின்றனரா அப்படித் தொடங்கப் பட்ட புரொஜெக்ட்கள் திட்டத்தில் எவ்வாறு வரையறைகள் எழுதப் பட்டுள்ளதோ அதன் பிரகாரமே புரொஜெக்ட்-ல் அனைவரும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனரா, புரொஜெக்ட்-ஐ வாடிக்கையாளர் மகிழ்ந்து பெற்றுக்கொண்டாரா இந்த சாராம்சத்தை சரி பார்த்து நட்டத்தை தவிர்த்து லாபத்தைக் கூட்டி கொடுக்க வேண்டும். ஏ அப்பா பிரமாதம் என்ற சந்திரன் மாஸ்டர் மேம்பாலம் கட்டும் பணி போன்று என்றவுடன் நான் சிரித்து ஆமோதித்தேன்.
TAILORS OF NOIDA-வில் மேசையின் முக்கியமான பகுதியில் அது இது எது! போலாங்கோ! போலாங்கோ! என்கிறது. அதற்குள் சந்திரன் மாஸ்டர் நம்மைப் பார்த்து போயிராதீங்க, ஏதோ வருதாம். டேய் என்னடா பர்கரா.. பிட்சா! பிட்சா வருதாம். சாப்பிட்டு வீட்டுக்கு கட்டிட்டு போங்க. மறக்காம என்ன! என்கிறார்.
சந்திரன் மாஸ்டர் என்ன தோணிற்றோ கொஞ்சம் இதைக் கேளுங்கள் நான் என்ன சொல்றேன்டால் நீங்க ஆடிட்டர் லாபத்தை பெருக்கிக் கொடுக்கறீங்க இல்ல யோசனை சொல்றீங்க. அப்ப நாம் காலைல பாத்த மாதிரி விபத்து இப்பலாம் ரெம்ப மலிஞ்சில்ல போச்சு. உசிரப் புடிச்சு வச்சாலும் அதே கணக்கு தானே. உங்க ஆளுங்கள வச்சி பண்ணா, முடியுமா? என்றார். நான் கண்டிப்பாக முடியும் தான். இப்ப பாருங்கள் இங்க ரெண்டு ரோடு தள்ளி நடைப்பயிற்சி போனப்ப ஒரு வேன் வண்டி எத்தையோ ரெண்டு மாடி ஒசரத்துக்கு ஏத்திக்கிட்டு வந்து ட்ராஸ்பார்மரை புஸ்ஸாக்கிட்டான். லீவு நாளுமதுவுமா ஒரு நாள் முழுக்க பவரில்லை. போங்கடா என்று எல்லோரும் சத்தம் போட்டு சண்டையே ஆகிவிட்டது. வேன் வண்டிக் கார பய மேல கைய வச்சிட்டானுக! ஊர்காரனுகளை கேக்கவா வேணும். கிளம்பறதுக்கு முன்னாலேயே முழுக்க வண்டியில் ஏற்றிய லோடு பத்தி சரியா சோதித்து பாக்கணும். செக்லிஸ்ட் என்போம். சில விசயம் எல்லாம் செய்து தான் பார்க்க வேண்டும். இந்த மாதிரிப்பட்ட விசயத்தில் ஆரம்பத்திலேயே லாப நட்ட கணக்கு படி பார்க்காமல் வெற்றிகளை அள்ள வேண்டும், அப்புறம் அது லாபக் கணக்கில் கண்டிப்பாக வந்துவிடும்.

நான் படபடவென பேசித் தீர்க்க, சய்யிது நீங்க சொன்னது தான் நாங்க இப்ப பண்ணிட்டிருக்கோம் பா! நிறைய லோடு வந்தால் இரண்டு வண்டி கட்டாயமாக கேட்கிறோம். வெளியில் நீட்டிக் கொண்டிருக்காமல் நன்றாக உறை கொண்டு மூடுதல், மழை நீருக்கு பாதுகாப்பு, மேப் புக்கு கொடுத்திருக்கோம் வழி பார்த்து செல்ல, அதுவா மேப்புக்கில் முன்னரே வழியை பென்சிலால் கோடு போட்டு மாற்று வழிப் பாதையும் வரைந்து கொடுத்து விடுவோம் என்று கூறினார் சந்திரன் மாஸ்டர். அப்படிப் பண்ணால் தானே வேலையில் ஒரு சிறப்பு இருக்கும் என்று நான் சப்போர்ட் பண்ணினேன். கெத்துன்னு சொல்றீரா, ஆமாம் சந்திரன் மாஸ்டர் அது தானே கெத்து!

பிட்சா வந்ததும் எனக்கு முதலில் கொடுத்தனர். எல்லோரும் அமர்ந்து சாப்பிட நான் சுடசுட வாயில் திணிக்கையில் சந்திரன் மாஸ்டரின் கேள்வி கேட்டு அப்படியே நிறுத்தினேன். தூத்துக்குடில என்னப்பா? என்றார். எனக்கும் ஒன்னியும் புரில. ரோட்டுல அங்க இங்க நடந்து டீக்கடையில பார்பர் கடையில என்னா பேசிக்கறாங்கன்னு கேட்டா ஏதாவது ஒரு ஐடியா கிடைக்கும். ரொம்ப பாத்து பாத்து செய்யற விசயத்திலயும் கஸ்மாலம் ஆயிரும். கஸ்மாலம் ஆயிருச்சுனா, இப்ப மாதிரி, அதை சரி செய்ய தான் முத வேலையா செய்யணும். எல்லாம் மெய்யாலுமே பெரிய ஆளுங்கோ, எல்லாம் சேந்து மனசு வச்சா ஆத்தா மகமாயி காப்பாத்திருவா. ஒங்க மகமாயி தான் சொல்லுறேன். பிட்சாவை நன்றாக மென்று சாப்பிட்டேன். என்னா பிட்சா கடை இது புது பேரு.. நல்லா இருக்கு என்றேன்.

விடைபெறுவதற்குள் தபால்கார துரையண்ணன் வந்து விட்டார். என்னைப் பார்த்ததும் கியா பா கைசா பா ஹை தூ. கான் க்ஹர் தரஃபிச் திஸ்தானி, கைசே ஹைன் க்ஹர் மே சப்பி? ஏ கான் பா ஆத்தா ஏ அட்ரஸ், ஜரா தேக்கோ போல்! என்றார். இவர் எங்கேயோ பெறந்து வளந்த எடத்துல எங்க வூட்டு உருதுலயே குளிப்பாட்டி பொட்டு வச்சு விட்டிருக்காங்க. மனுசன் நம்மிடம் எப்பவும் டெமோ மோட்-லயெ முழு மென்பொருள் வேலைப்பாட்டினை செய்து காட்டுவார். இது செல்லாத்தாவுக்கு வந்திருக்கு, எங்க அடுத்த தெரு மூலையில இஸ்திரி பொட்டி வலிச்சிட்டு இருக்குமே ஒரு ஆயா. அவுகதான். துரையண்ணன் தேங்கு பேட்டா வரேன் என்று சைக்கிளில் வாகாக ஏறிக் கொண்டார். எனக்கு யோசித்தாலே மீண்டும் பசி எடுப்பது போலிருந்தது.