இன்று கைத்தையல் பாடம் என்று சொல்லியிருக்கிறேன். வெயிட் வெயிட்! ஏன் தள்ளிப் போடவேணும்? இப்ப இந்த பாடம் ஈசியாக இருக்கும் என்பது தான் நான் சொல்கிறேனே! என்ன? சரி! அதுக்கு எல்லோரிடமும் கத்தரிக்கோல் வேண்டும். இருக்கிறதா? இருக்கிறதா! ஓகே ஓகே! சரி எப்ப இருந்தாலும் கைத்தையல் முறைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றபடி உங்கள் விருப்பம். நம்பத்தகுந்த விசயங்களைப் ஒருதரம் பார்த்து விட்டு பாடத்துக்கு செல்வோமா? நம்பத்தகுந்த விசயங்கள் என்பது நம் அன்றாட வகுப்பில் நாம் ஆற்றிவரும் அரிய படிப்பு முறை. இதில் நாம் நம்ப முடியாத விசயம் ஒன்றினை எடுத்து நம்பத்தகுந்த விசயமாக மாற்ற என்ன பண்ண வேண்டும் என்று ஏழு நிமிடங்கள் - ஏழே நிமிடங்கள் தத்தம் செய்து வாசிக்க வேண்டும்.
{ எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு } - குறள் 470
{ தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். }
இந்த குறள் தான் TAILORS OF NOIDA-வுக்கு அணிந்துரை. புதிதாக உருவாக்குதல் அழகு. சிறுபிள்ளைகள் போல. நாம் குழந்தை பிறந்து தவழ்ந்து அ அம்மா என்று சொன்னவுடன் மகிழ்ந்து விடுகிறோம். அதுக்கப்புறம் Z வரையில் சொல்லும் போது நாம் என்ன செய்கிறோம்? நம்ம தையல் தொழிலை பொருத்த மட்டில் வாடிக்கையாளர் வந்த முதல் அறிமுகம் முதல் வாடிக்கை - A என்று குறிப்பெழுதி Z வரையில் அவருடன் செல்ல வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் நாம் அதிகமான முறையில் பில் செய்ய வேண்டும். நம் திறமும் சேவையும் மனப்பான்மைத் தன்மையும் கொண்டு செயலாற்றினால் நாம் அதிகமாக கேட்கும் பில் தொகையை வாடிக்கையாளர்கள் தருவது மட்டுமல்லாமல் தம் அயலார் நலம் பேணும் போது நம்மைப் பற்றி உயர்வாகவும் கூறுவர். நம்பத்தகுந்த விசயங்கள் நம் தையல் தொழிலுக்கு மிகவும் உறுதுணையான பாடமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் நம்மிடம் கேட்கும் மிகவும் கடினமான தேவைகளை அவர்களுக்கு பிடித்தமான வடிவில் செய்து தர நம்பத்தகுந்த விசயங்கள் பயிற்சி முறை கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றாகும். இன்றைய நம்பத்தகுந்த விசயங்கள் பயிற்சிக்கு பின் நம் பாடத்திற்கு செல்லலாம். இன்றைய நம்பத்தகுந்த விசயம்: கடிகாரம் இன்றி அன்றாட வாழ்க்கை!
சந்திரன் மாஸ்டர் அவர் தையல் வகுப்பினை ஸ்பீட்போட் சவாரி போவது போன்ற ஸ்டைலில் பாடம் நடத்துவார். பாடம் எடுத்தவுடனே நல்ல ஸ்பீட், நல்ல துடிப்பு. மாணவர்க்கும் ஓட்டிப் பார்க்க கொடுத்து வியர்க்க விடுவார். செயல்கலை பாடம் வரும்போது மாம்பழக்கூடைக் காரி கூடையை இறக்கி வைத்து காலை நீட்டி உட்கார்ந்து நீயே பொறுக்கிக்க கண்ணு என்பது போல இருக்கையில் உட்கார்ந்து விடுவார். யாருக்காவது சிரமம் இருந்தால் இன்னொரும் மாணவர் உதவி செய்து தெரிந்து இருவரும் தெரிந்து கொள்வர். முடித்துக் காட்டினால் அதைக் கண்டு கருத்து கூறுவார். சரி தவறு இரண்டுமே திருத்தி விடுவார். அன்றைய வகுப்பு நன்றாகவே அமைந்தது. மாணவர்கள் கூடிப் பேசி கைத்தையல் வகுப்பு நாளையே சொல்லிக் கொடுக்க வேண்டினர். எந்த சலனமுமின்றி ஒப்புதல் அளித்தார் சந்திரன் மாஸ்டர். மாணவர்கள் சென்றுவிட்டனர். சந்திரன் மாஸ்டர் தனியாக வகுப்பறையை ஒரு முறை சுற்றி வந்து நோட்டமிட்டார். சுவற்றினை மெதுவாக தொட்டு வருடிக் கொண்டு ஒவ்வொரு விசயங்களையும் உன்னிப்பாக பார்த்தார். சின்ன மாறுதல் செய்யவேண்டியது ஒன்றை மனத்தில் கவனித்து இருத்திக் கொண்டார். கதவருகே வந்து திரும்பி ஒரு முறை வகுப்பறையைப் பார்த்தார். மீண்டும் வாசல் பக்கம் திரும்பி வலக்காலை எடுத்து வெளியில் வைக்க வேகமாக ஊன்ற தரையே அவருக்குத் தட்டுப் படவில்லை. *சிந்தூரீய்ய்ய்* என்று ஓங்கிக் கத்தியவாறு பெருத்த ஓசையுடன் டமால்-என்று கீழே சரிந்து விட்டார்! அச்சச்சோ!! யாரும் வாருங்களேன் என்று கலக்கத்தில் அவருடைய இதயம் அரற்றிக் கொண்டிருக்க...சந்திரன் மாஸ்டரின் மூளையில் பளிச் பளிச் என்று போலிசு வண்டி மினுங்கும் விளக்கு போல பரபரப்பானது. என்ன ஆம்புலன்ஸ் சத்தம்! வழி விடு வழி விடு என்று சொல்லிக் கொண்டே தம் பின்னாடி ஆம்புலன்ஸ் வருவதாக எண்ணி சந்திரன் மாஸ்டர் பொறுப்புணர்ச்சி மிக்கவராக அந்த நிலையிலும் வழி விட வேண்டும் என்கிற எண்ணத்தால் உந்தப் பட்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்று இதயத்தைப் பிடித்துக் கொண்டார்!


No comments:
Post a Comment